Monday, July 11, 2005

பண்டிதர் வீ.பரந்தாமனின் நூல் வெளியீடு

பண்டிதர் பரந்தாமனின் தூய தமிழ் சொற்களடங்கிய நூல் வெளியீடு

பண்டிதர் வீ.பரந்தாமனின் வேர் - அடி வழித் தமிழ்ச் சொற்பிறப்பியற் சிற்றகர முதலி எனும் தூய தமிழ் சொற்களடங்கிய நூல் யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கரையரங்கில் சனிக்கிழமை 9 .7.2005 அன்று வெளியிட்டு வைக்கப்பட்டது.

யாழ். பல்கலைக்கழக தலைவர் கலாநிதி சி.சிவலிங்கராஜா தலைமையில் நடைபெற்ற இந்நூல் வெளியீட்டு விழாவில் பல்கலைக்கழக பேராசிரியர்கள், தமிழ்மொழி இலக்கிய ஆர்வலர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள் என பெரும்பாலானோர் கலந்துகொண்டு ஆர்வமுடன் நூலினை பெற்றுக் கொண்டனர்.

ஆரம்ப நிகழ்வாக தமிழீழ தேசியக் கொடியினை பேராசிரியர் அ.சண்முகதாஸ் ஏற்றினார்.

நூல் வாழ்த்துரையை பொருளியல்துறைத் தலைவர் வித்தியானந்தன் வழங்கினார்.

நூல் வெளியீட்டுரையை விடுதலைப் புலிகளின் யாழ். மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.இளம்பரிதி ஆற்றினார்.

நூலின் முதல் பிரதியை இளம்பரிதி வெளியிட இளைப்பாறிய ஆசிரியை செல்வி. திலகவதி பெரியதம்பி ஏற்றுக் கொண்டார்.

நூல் வெளியீட்டைத் தொடர்ந்து நூலின் அறிமுக உரையை கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ் வழங்கினார்.

மதிப்பிட்டு உரையினை கோப்பாய் ஆசிரியர் கலாச்சாலை முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி திருநாவுக்கரசு பேராசிரியர் சண்முகதாஸ் ஆகியோர் நிகழ்த்தினர்.

படங்கள்: யாழ். பாலன்

4 comments:

வசந்தன்(Vasanthan) said...

அந்நூலின் பெயர் "வேர் - அடி வழித் தமிழ்ச் சொற்பிறப்பியற் சிற்றகர முதலி".

புதினத்தில் அதை வேறு ஏதோ பெயர் போல் (தமிழீழத்தையும் இணைத்துப்) போட்டுள்ளார்கள். அந்தப் புத்தகம் என்னிடமுமுண்டு. அதைப் பற்றி இங்கே எழுதியுள்ளேன்.
தயவுசெய்து புத்தகத்தின் சரியான பெயரைப் பாவிக்கவும்.
நன்றி

Chandravathanaa said...

சரியான தகவலுக்கு நன்றி வசந்தன்.
மாற்றியுள்ளேன்.

Anonymous said...

சந்திரவதானா அக்கா,
உங்கள் பின்னூட்டப் பெட்டியில் சில எழுத்துக்கள் தெரியவில்லையே. (நிறப்பிரச்சினை)
இப்போது நான் "இங்கே" என்று எழுதி இணைப்பும் கொடுத்திருந்தேன். அது தெரியவில்லை. நிறப்பிரச்சினையைத் தீர்க்க முடியாதா? post a comment என்பதும் தெரியவில்லை.

Chandravathanaa said...

நன்றி வசந்தன்.
கவனிக்கப்பட வேண்டிய விசயங்களில் இதுவும் ஒன்றாக இருந்தது.
நீங்கள் சுட்டிக்காட்டியதும் கவனித்து நிறத்தை மாற்றி விட்டேன்.